Agriculture Marketing
வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை


உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம்


பழப்பொருட்களின் ஆணை (FPO), 1995

பழப்பொருட்களின் ஆணை (FPO), 1995 இன்றியமையாத பொருட்களின் சட்டம் 1955ன் படி பிரிவு 3ன் கீழ் அறிவிக்கப்பட்டது. இதன் முக்கியக் குறிக்கோள் யாதெனில், உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை சுகாதாரமாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்குமாறு செய்வதாகும். நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்குமாறு செய்வதாகும். நல்ல ஆரோக்கியமான நிலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் மூலம் தரம் நிறைந்த பொருட்கள் என உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்தப் பழப்பொருட்களின் ஆணைக்கு குறைந்தபட்சத் தேவைகள் பின்வருமாறு.

  1. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான நிலையானது வளாகம், சூழல் மற்றும் அலுவலர்களிடம் இருத்தல் வேண்டும்.
  2. நீரினை செயற்பாங்கின் போது பயன்படுத்தவேண்டும்.
  3. இயந்திரச் சாதனங்கள் மற்றும் கருவிகள்
  4. பொருட்களை தரப்படுத்துதல்

மேலும் பதனச்சரக்கு மிகுதிப்படுத்துதல் மற்றும் ஏதேனும் கெட்டுப் போகும் நிலை உள்ள வெவ்வேறு பொருட்களின் கட்டுப்பாட்டினை உள்ளடக்கியது.

இந்த ஆணையானது, உணவுப் பதப்படுத்தும் தொழில்துறைகளின் பழம் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் இயக்ககம் மூலம் நடைமுறைபடுத்தப்பட்டது. இருந்த இயக்ககம் ஆனது நான்கு மண்டல அலுவலகங்கள் அமைந்துள்ளது. டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சென்னை போன்ற நான்கு இடங்களில் மண்டல அலுவலகங்களை அமைத்துள்ளது. டெல்லி, மும்பை, கல்கத்தா மற்றும் சென்னை போன்ற இடங்களில் மண்டல அலுவலகங்களும் லக்னோ மற்றும் கெளஹாத்தியில் துணை அலுவலகங்களும் உள்ளது. இந்த இயக்கமானது உற்பத்திப் பிரிவினை கண்காணித்து, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களில் இருந்து தொடர்பில்லா மாதிரிக்கூற்றினை தேர்வு செய்து, (FPO)ன் அடிப்படையில் ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்கின்றன.

மத்திய பழ ஆலோசனைக் கூட்டமானது. அரசுத் துறைகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதிகள், இந்தியத் தரத்தின் நிர்வாகம், பழங்கள் மற்றும் காய்கறி பொருட்கள் மற்றும் பதனிடப்படும் தொழில்களை போன்றவற்றின் மூலம் பழப்பொருட்களின் ஆணைக்குத் தேவையான மாற்றங்களை உள்ளடக்கியது. மேலும் தொழில்துறையின் தேவை மற்றும் தளர்ந்த பொருளாதாரக் கூற்றின் அடிப்படையில் (FPO)ல் முக்கிய மாற்றங்கள் ஆனது 1997ல் செய்யப்பட்டது.

மாமிச உணவுப் பொருட்களின் ஆணை (MFPO)

மாமிச உணவுப் பொருட்களின் ஆணை ஆனது 1973ல் இன்றியமையாத பொருட்களின் சட்டம் 1955ன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு, சுகாதாரம் மற்றும் பிறத் தேவைகளைத் தருகிறது. மேலும் மாமிச உணவுப் பொருட்களுக்கு, பலமான உலோகங்கள், பதனச்சரக்கு, பூச்சிக்கொல்லிகள், மிஞ்சிய பொருட்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. இந்து ஆணையானது ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊரகப் பகுதி மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 128 அத்தாட்சி / உரிமமானது 31ம் தேதி மார்ச் 1998ல் (MFPO) 1978ன் கீழ் வழங்கப்பட்டது. தொழில் ஒதுக்கீட்டில் ஏற்றப்பட்ட மாற்றத்தின் அடிப்படையில் வேளாண் அமைச்சகமானது (வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறை) இந்த ஆணைக்கு நிர்வாக அமைச்சமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பால் மற்றும் பால் பொருட்களின் ஆணை (MMPO)

பால்  மற்றும் பால் பொருட்களின் ஆணை 1992 ஆனது வேளாண் அமைச்சகத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையின் மூலம் நிர்வகிக்கப்பட்டு இன்றியமையாத பொருட்களின் சட்டம் 1955ன் படி பிரிவு 3ன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொது மக்களுக்கு திரவ நிலையில் பாலானது வினியோகிக்கப்படுகிறது. உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்மானம் போன்றவற்றின் அடிப்படையில் பால் மற்றும் பால் பொருட்களானது தேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும்  விநியோகிக்கிறது.
பால்பண்ணை, இயந்திர சாதனங்கள் மற்றும் வளாகங்கள், பால் மற்றும் பால் பொருட்களின் தரக்கட்டுப்பாடு தரப்படுத்துதல் போன்றத் தேவையான சுகாதாரத்தினை மேம்படுத்துவதாகும். MOP 1998ன் கீழ் 254 விண்ணப்பம் சான்றளிப்புக்களானது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைத் துறையானது வழங்கியுள்ளது.

உணவுப் பாதையின் சட்டத் தொகுப்பு

இந்தச் செயலானது லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டதாகும் மற்றும் இதன் பொருள் உணவுக் குறிமுறை ஆகும். இந்தத் தொகுப்பானது விருப்பமுள்ள அறிவியலறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அரசாங்கங்கள், வாங்குவோர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் போன்றவர்களை ஒருங்கிணைத்து இவர்கள் மூலம் உணவு உற்பத்தி மற்றும் வர்த்தகத் தரத்தினை மேம்படுத்துகின்றது. இந்த தரப்படுத்துதல், வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசித்தல் மூலம் வாங்குவோர்களை பாதுகாத்து பன்னாட்டு வர்த்தகத்திற்கு உதவி செய்கிறது. இந்தச் சட்டத் தொகுப்பானது உலகத்தில் உள்ள உணவு மற்றும வர்த்தக வல்லுநர்களை ஒருங்கிணைக்கிறது. மேலும் இந்த மதிப்பீடானது பன்னாட்டு வர்த்தகத்தின் பேச்சுவார்த்தைகளும், WTOல் ஏற்படும் தகராறுகளுக்கும் உதவுகிறது.

இந்தியாவில், சட்டத்தொகுப்பு ஒப்பந்தமானது சுகாதார  அமைச்சகத்தினை சுகாதாரப் பணிகளின் இயக்ககம் ஆகும். எனினும் உணவுப் பதனிடப்படும் தொழில் துறையின் அமைச்சகமானது உணவுப் பாதை சட்டத் தொகுப்பினை ஒத்துள்ளது. செயல் திட்டமுறையின் அடிப்படையில் அமைச்சகத்தின் சட்டத்தொகுப்பு கண்காணிப்பு பகுதியின் மூலம் 1998-99ல் ரூபாய் 58  லட்சமானது கொடுக்கப்பட்டு, தகவல் அடிப்படை வெவ்வேறு தரத்தின் தொழில்நுட்பத் தேர்வுகள் போன்றவற்றின் மூலம் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு திட்டமானது வடிவமைக்கப்படுகிறது. இந்த அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஒட்டாவாவில் 25 மற்றும் 29ம் தேதி நடந்த மே, 1998ல் நடந்த  உணவு விவரக்குறிப்புகளின் சட்டத் தொகுப்பு கூட்டமைப்பின் பொதுக் கொள்கைகள் என்றக் கூட்டத்தின் போது மற்றொரு அமைச்சகத்தின் அதிகாரிக்கு அதிகாரமானது ஒப்படைக்கப்பட்டது.

பயறுவகைகள், உண்ணத்தக்க எண்ணெய்வித்துக்கள் மற்றும் உண்ணத்தக்க எண்ணெய்களின் (சேமிப்பு) ஆணை, 1977. அரசாங்கமானது, முழுவிற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் கையிருப்பான பயறுவகைகள், எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்கள் அதிகப்படுத்துவதையும் மற்றும் வினியோகத்தினனை வடிவமைப்பதனையும், அதன் பகிர்மானமானது சரியான விகிதத்திலும், சரியான விலையில் கிடைக்கும் படி செய்வதனையும் ஊக்குவித்து மேம்படுத்துகிறது.

உணவுத் தரம்

உணவுப் பதப்படுத்தும அமைச்சகமானது, ரூபாய் 59.2 லட்சத்தில் உணவுப் பொருட்களை ஆராயும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடம் மேம்பாட்டிற்காக புதுடெல்லியினல் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு மையத்துக்கு திட்ட அறிக்கையை அறிவித்துள்ளது. இந்த திட்ட அறிக்கையின் முக்கியக் குறிக்கோள் யாதெனில் பகுப்பாய்வு ஆய்வுக்கூடத்தினை மேம்படுத்தி, நவீனமயமாக்குதல் ஆகும். இதே வருடத்தில் அமைச்சகமானது சிசிஎஸ் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகம், ஹிசரின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தரக்கட்டுப்பாடு மற்றும் உணவு பகுப்பாய்வுக்கு ரூபாய் 12.32 லட்சத்தினை திட்ட அறிக்கையை அறிவித்துள்ளது. இதன் முக்கிய குறிக்கோள் யாதெனில் தரத்தினை உறுதி  மற்றும் பகுப்பாய்வுகளின் பணிகளான  உணவு பதப்படுத்தும் தொழிற்துறைகள், நுண்ணுயிரியல் நோய்க்காரணி மற்றும் பூஞ்சை நோய்களைப் பற்றிய பரிசோதனை மற்றும் சத்துப் பொருட்களின் பண்பளவான கனிமங்கள், வைட்டமின்கள், உணவு மதிப்புகளான கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துக்களை மதிப்பிடுதல் போன்றவை ஆகும்.

ஹசார்டு அனலைசிஸ் அன்ட் ஃகிரிட்டிகள் கன்ட்ரோல் பாய்ண்ட் (HACCP - Hazard Analysis and Critical Control Point)

இது ஒரு முக்கியமான தர உறுதி திட்டமாகும். இந்தத் திட்டமானது பொருட்களின் பாதுகாப்பு மற்றும் நல்ல தரமுள்ள பொருட்களை உறுதி செய்வது ஆகும். இந்தத் திட்டமானது வழக்கத்துக்கு மாறான, பன்னாட்டு வர்த்தகத்தின் மாறுபாட்டினை உள்ளடக்கியது. HACCP மற்றும் ISO 9000 சான்றிதழ் உடன் மொத்த தர மேலாண்மை (TQM - Total Quality Management) அமைச்சரகமானது ரூபாய் 10 லட்சம் என்ற அளவில் 50 சதவிகிதம் செலவினைக் கொடுக்கிறது.

இந்த அமைச்சகமானது, ஒரு நாள் ஆய்வகம் மற்றும் ஐந்து நாள் பயிற்சி நிகழ்ச்சிக்கு APEDA  அமைப்பின் மூலம் 30ம் தேதி நவம்பர் முதல் 5ம் தேதி டிசம்பர் வரை, 1998ல் என்எஸ்எப் என்ற பன்னாட்டு தளத்தகை பதிவு செய்தல் கட்டமைப்பு, ஓபிஏ உடன் இணைந்து நல்கை புரிந்துள்ளது. இந்த அமைப்பானது HACCP - 9000 சான்றளிப்பின் முக்கிய அதிகாரமாகும். HACCP ஆனது சுகாதார மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் பொருட்களின் தரத்தினை உறுதி செய்கிறது, மேலும் ஏற்றுமதிக்கு மிகவும் தேவைப்படுகிறது.

உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலை உடன் தொடர்புடைய சட்டங்கள்

பல்வேறு வகையான உணவுச் சட்டங்களானது வெவ்வேறு அமைச்சகங்கள் / துறைகள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு காரணங்களுக்காக சட்டமானது கொண்டு வரப்பட்டுள்ளது.

  1. வரியறை உடைய உணவின் வழிமுறைகள்
  2. ஆரோக்கியமான முறையில் பதப்படுத்துதல் / உற்பத்தி செய்வதின் வழிமுறைகள்.

சில உணவுச் சட்டங்கள் கட்டாயமானதாகவும், சில உணவுச் சட்டங்கள் மனமுவந்து / தன்னிச்சையானதாகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள உணவுச்சட்டங்களின் விபரம் பின்வருமாறு.

உணவுச் சட்டங்கள்
உணவுக் கலப்பட தடுப்புச் சட்டம் (சுகாதார அமைச்சகம்)

இச்சட்டமானது உணவுப் பொருட்களின் வரியறைகளை உள்ளடக்கியது மற்றும் இது கட்டாயமானதாகும். சுகாதார அமைச்சகம் 1995, தலைமைப் பதவியில் உள்ள இ.எஸ் வெங்கட்ராமய்யா, இந்திய முதன்மை நீதிபதி (ஓய்வுபெற்ற) கீழ் பணிக்குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்குழுவானது, தரம் வாய்ந்த உற்பத்தி பயிற்சியை வலியுறுத்தி கலப்படம் மற்றும் குற்றங்களை கண்டுபிடித்தலுக்கு உதவுகிறது. இதிலும் கூட ஆய்வுக்கூடங்களின் கருவிகள் மற்றும் தகுதியுள்ள நபர் இல்லாமலும் உள்ளது. இந்தப் பணிக்குழுவின் ஆலோசனைப்படி பிஎப்ஏ சட்டமானது உணவுப் பாதுகாப்பு சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

வேளாண் உற்பத்தி (தரம் பிரித்தல் மற்றும் குறித்தல்)
சட்டம் (ஊரக வளர்ச்சி அமைச்சகம்)

இந்தச் சட்டமானது பொதுவாக அக்மார்க் என்றும் தன்னிச்சையானதாகும். இந்தச் சட்டத்தின் வரியறையில் பல்வேறு வேளாண்மைப் பொருள்களும் சில பதப்படுத்தப்பட்ட உணவுகளும் உள்ளடங்கியுள்ளது.
இந்திய நிர்வாக தரப்படுத்துதல் (பிஐஎஸ்) மூலம் இயக்கப்படும் / செயலாற்றப்படும் சட்டங்கள்
பிஐஎஸ் என்பது அதிக அளவில் வெவ்வெறு உணவுப் பொருட்களைத் தரப்படுத்தும் நிர்வாகம் ஆகும். இந்த தரப்படுத்துதல் கூட தன்னிச்சையானதாகும்.

இன்றியமையாத பொருட்களின் சட்டம்

FPO,MMPO, மாமிசப் பொருட்கள் ஆணை மற்றும் காய்கறி, எண்ணெய்கள் பாதுகாப்பு ஆணை போன்ற பல்வேறு தரக்கட்டுப்பாடு ஆணைகளை உள்ளடக்கியதே இன்றியமையாத பொருட்களின் சட்டம் ஆகும். இது ஒரு கட்டாயமானதாகும் மற்றும் ஆரோக்கிய நிலையை ஒழுங்குபடுத்துவதாகும். உணவுப் பொருட்களின் ஆணை என்ற ஒரு ஆணையில் இந்தச் சட்டமானது இணைந்துள்ளது.

உணவுச் சட்டங்களின் இணக்கம்

  1. ஒரே மாதிரி மற்றும் காரணங்கள் உடைய அணுகும் முறையின் மூலம் உணவுத் தரத்தினை ஒழுங்கு செய்வதற்கு பன்மடங்கு கொண்ட சட்டங்களின் உதவி தேவைப்படுகிறது.
  2. செயலாளர்களின் கூட்டமைப்பின் (COS) கருத்திற்கு / நினைவிற்கு, வர்த்தக விநியோகங்கள் மற்றும் நுகர்வோர் தொடர்புகளின் அமைச்சனமானது ஒரு பொருள் அடங்கிய தாளினைக் கொண்டு வருகிறது. இந்தத் தரமானது பிஐஎஸ்ன்னின் இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரப்படுத்துதலைப் பற்றி எடுத்துரைக்கிறது. இந்தச் செயல்முறையானது உணவுச்சட்டங்களின் இணக்கத்திற்கு ஒரு சிறந்த செயல்முறையாகவும், COS ஆனது சிறந்த முடிவினைத்தர ஆலோசனையை இன்னும் தந்து கொண்டு இருக்கிறது.
  3. ‚ நுல்சி வாட்டியான் கீழ் செயல்படும் பணிக்குழுவானது திட்ட அறிக்கையை, அரசாங்கத்தின் கவனத்தில் சமர்ப்பிக்கிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரத்தினை உயர்த்துவதற்கு துணைக்காரணமாக இந்தப் பணிக்குழு செயல்படுகிறது. பணிக்குழுவானது கீழ்க்கண்ட ஆலோசனை பரிந்துரைத்துள்ளது. அவை வருமாறு
  4. உணவு வழிமுறைகளின் ஆணை (FPA) ஆனது வீட்டுக்குரிய மற்றும் ஏற்றுமதி சந்தைக்காக உணவு தரப்படுத்துதலை வடிவமைத்து மற்றும் நிகழ்நிலைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
  5. FRA ஆனது PFA வாக பன்னாட்டு நிர்வாக தரப்படுத்துவதன் மூலம் மாற்றப்பட்டுள்ளது. பணிக்குழுவானது எளிமையான சேமிப்பு வசதி, மாதிரிக்கூறு செயற்பாட்டின் சுருக்கம், எளிமையான முறையில் நியமிக்கப்படுபவர்களை தேர்ந்தெடுப்பது, குறைவான நேரத்தில் குறைபாடுகளை கண்டுபிடிப்பது, நிலையான பகுப்பாய்வு, சட்ட விரோதச் செய்கையின் அளவினைப் பொருத்து தண்டனை அறிவிப்பு மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் முன்னேற்பாடு வசதிகள் போன்ற பத்து வகையான பரிந்துரைகளைத் தந்துள்ளது.
  6. மத்திய உணவுத் தரக் கூட்டமைப்பு (CLFS) ஆனது, FRA நிர்வாக சபையின் துரிதமான தீர்மானத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
  7. இந்தியத்  தரப்படுத்தும் இணக்கமானது சட்டக்கோவை மற்றும் WTOன் தர முறைகளைக் கொண்டது.

அணுகுமுறை

வ.எண்

சம்பந்தப்பட்ட வழிமுறைகள்

நபர்கள் / அலுவலர்களின் தொடர்பு

1.

பொருள் தேர்வு மற்றும் திட்ட அறிக்கை / சாத்தியமான அறிக்கை / வியாபார கருத்தாய்வுக்கு உதவி

சிறு தொழில் சேவை மையம், சென்னை.

2.

தற்காலிக / நிரந்தர பதிவு சான்றளிப்பினை பெறுதல்

மாவட்ட தொழில்களின் மையத்தின் மூலம், எந்த மாவட்டத்தில் யூனிட் (பகுதி) யை நிர்மாணித்தல்.

3.

விற்பனை வரியின் கீழ் பதவி

O/o வர்த்தக வரி ஆணையர், சென்னை.

4.

மத்திய வரியின் கீழ் பதிவு

O/o மத்திய வரி மற்றும் சுங்க வரி வசூலிப்பவர், சென்னை.

5.

நிதியைப் பெறுதல்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வர்த்தக வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு அமைப்பு, இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி.

6.

நீர் வளத்தினைப் பெறுதல்

தமிழ்நாடு குடி நீர்வளம் மற்றும் சாக்கடை நீர் வாரியம்.

7.

மின் இணைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம்.

8.

இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் பதிவு (20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் உள்ளடக்கிய பிரிவுக்கு மட்டும்)

ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகம், சென்னை.

9.

ISI சான்றளிப்பை பெறுதல்

இந்திய நிர்வாக தரப்பாடு, நனாக் பவன், புதுடெல்லி.

10.

வர்த்தக சின்னம் / அடையாளமப் பதிவு

வர்த்தக அடையாளப் பதிவாளர், 9, நீதிபதி ஜம்முலிங்கம் முதலியார் சாலை, சென்னை.

11.

தொழில்நுட்ப வடிவமைப்பு பெறுதல்

தொழில்நுட்ப அமைப்பு மற்றும் வடிவமைப்பு தணிக்கையாளர், 776, திருவல்லிக்கேணி உயர் சாலை, சென்னை.

12.

உணவுப் பொருட்களின் உற்பத்திக்கான உணவுப் பொருட்களின் ஆணையின் கீழ் உரிமம் பெறுதல்.

துணை இயக்குநர், வியாபார மற்றும் கண்காணிப்பு இயக்ககம், உணவு மற்றும் வேளாண் அமைச்சகம், சாஸ்திரி பவன் 35, ஹட்டோஸ் சாலை, சென்னை 600 006.

13.

இன்றியமையாத எண்ணெய்களின் உற்பத்திக்கு விபரம் பெறுதல்

மத்திய மருந்து மற்றும் வாசனையுள்ள தாவரங்களின் நிறுவனம், மண்டல மையம்
விஏஎஸ்,  ஜிகேவிகே வளாகம், ஹெப்பல், பெங்களூர்.

14.

மருந்து மற்றும் ஒப்பனைப் பொருளின் உற்பத்தி உரிமை

மருந்து தணிக்கையாளர், மருந்து தணிக்கையாளர் அலுவலகம், சென்னை.

15.

மாசுக் கட்டுபாட்டு உரிமை

தமிழ்நாடு மாதக் கட்டுப்பாடு வாரியம், சென்னை.

16.

அரிசி கரைப்பான் பிரித்தெடுக்கும் பகுதி அமைத்தல்

தமிழ்நாடு வர்த்தக விநியோகத் துறை, சென்னை.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு